March 3, 2026

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் தொடர்பாக…

News image

தங்கம் (கோப்புப்படம்)

சென்னையில் தங்கம் விலை இன்று(மார்ச் 3) சவரனுக்கு ரூ. 80 குறைந்து, ரூ.1,25,200-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை கடந்த சில நாள்களாக தொடர்ந்து ஏற்றம் கண்டு வந்தது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாள்களில் மட்டும் மொத்தம் சவரனுக்கு ரூ.7,000 உயர்ந்தது.

ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் தாக்குதலின் எதிரொலியாக தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து வந்தது.

இரு நாடுகளுக்கு இடையே போர் நடைபெறும் போது மற்ற நாடுகள் பாதுகாப்பு முதலீடாக பங்கு சந்தைக்கு பதிலாக தங்கத்தின் மீது முதலீடு செய்வது வழக்கமான ஒன்றாகும்.

ஏற்கெனவே பல்வேறு சர்வதேச காரணங்களால் தங்கம் விலை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.Advertise with us

இதனிடையே, வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது. அதன்படி, கிராமுக்கு ரூ.115 குறைந்து ரூ.15,660-க்கும், சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.1,25,280-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,25,200-க்கும் கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 15,650-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் வெள்ளி ரூ. 315-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 3.15 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Spread the love