உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியை பிடிக்கவே முடியாது என நெல்லையில் பரப்புரையில் பாஜகவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்தார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக திமுக தலைமையில் 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது.மேலும் கூட்டணி முழுவதும் உள்ள மொத்தம் 175 வேட்பாளர்கள் திமுகவின் ‘உதயசூரியன்’ சின்னத்தின் கீழ் போட்டியிட உள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய தேர்தல் பரப்புரையை திருவாரூரில் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, திருநெல்வேலியில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரைப் நடத்தினார். பின்னர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,எடப்பாடி பழனிசாமி திமுகவில் திட்டங்களை எல்லாம் மாற்றி ஸ்டிக்கர் ஒட்டி வாக்குறுதிகளை கண்டு கொண்டிருக்கிறார்.
திமுக தேர்தல் பரப்புரை 2026
முதலில் மகளிர் உரிமைத் தொகை திட்டம், கடந்த தேர்தலில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்திய போது இதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்து இருந்தார். இந்த திட்டத்தின் மூலம் மக்களிடம் கிடைத்த வரவேற்பு தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அறிவித்தார்.பழனிசாமி சொன்னதையும் செய்ய மாட்டார் சொந்தமாகவும் செய்ய மாட்டார் என மக்கள் கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் திமுகவின் திட்டங்களை எல்லாம் காப்பியடித்து புதிய ஸ்டிக்கர் ஒட்டி வருகிறார் என்று கூறினார்.
திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?
டபுள் இன்ஜின் டப்பா எஞ்சின்
மேலும் டபுள் இன்ஜின் டப்பா எஞ்சின் சொல்லக்கூடிய அமித்ஷா ஆட்டி வைக்கும் எடப்பாடி பழனிசாமி. மக்களுக்காக பாஜக செஞ்சது என்ன? கடந்த 2014 பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்தார். 2016 பண மதிப்பிழப்பு நடவடிக்கை என்று கூறி நாட்டு மக்கள் அனைவரையும் பேங்க் வாசல்களிலும், ஏடிஎம் வாசல் வழியிலும் இரவும் பகலாக கால் கொடுக்க வைத்தார். இதில் எத்தனை பேர் இறந்தார்கள்.. இதனைத் தொடர்ந்து கடண்ந 2020 ஆம் ஆண்டு கொரோனா வந்தது. அப்போது பொதுமக்கள் அனைவரிடமும் வீட்டில் இருந்தபடி தட்டை தட்டுங்கள் மணி அடிங்க என்று ஒரு காமெடி ஷோவை நடத்தினார். கோடிக்கணக்கான மக்களில் நடுத்தெருவில் நடக்க வைத்தார். ஆக்சிஜன் சிலம்பத்திற்காக மக்களை அல்ல பட வைத்திருக்கிறார்.
பாஜக மீது ஸ்டாலின் கடும் விமர்சனம்
தற்போது மேற்காசிய போர் நடக்கிறது. பொறுப்பான மாநில அரசு, முதலில் சலுகைகளை அறிவித்து விட்டோம். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலத்தைப் போன்று தயாராக இருங்கள் என்று கூறிவிட்டு மக்களை கேஸ் சிலிண்டிற்காக காத்திருக்க வைத்திருக்கிறார். இது அனைத்தும் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் நடத்த அவலம். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி இல்லை, ஜிஎஸ்டி இழப்பீடு இல்லை, நீட் தேர்வு வழக்கு இல்லை, தமிழ் மொழி வளர்ச்சிக்கு நிதி கிடையாது, ரயில்வே திட்டங்கள் கிடையவே கிடையாது. மெட்ரோ ரயில் திட்டங்கள் இல்லை. கத்தி பூத்த மாதிரி ஒன்னே ஒன்று கண்ணே கன்று என்று சொல்லக்கூடிய மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அறிவித்தார்கள்.
தமிழகத்தில் பாஜகக்கு இடமே இல்லை
தமிழ்நாட்டில் இதுவரைக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை. பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு திட்டங்களும் வரவில்லை. இதுதான் பிரதமர் மோடியின் மாடல் என்று கூறினார்.தமிழ்நாட்டில் பாஜக என்று சொன்னால் மக்கள் விரட்டி அடிக்கிறார்கள். இதனை மனதில் வைத்துக் கொண்டு எப்படி .தமிழ்நாட்டில் எப்படி கால் பதித்து தமிழர்களுக்கு துரோகம் செய்ய யாராவது கிடைப்பார்களா என பாஜக வலை வீசி தேடிய போது கிடைத்தவர் தான் துரோகத்தில் டாக்டரேட் வாங்கினவர் எடப்பாடி பழனிசாமி என்று கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,தமிழகத்தில் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை உங்களால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் சவால் விடுத்தார்.

More Stories
மதுரை ரயில்வே கோட்டத்தில் பராமரிப்புப் பணிகள்: இன்று முதல் ரயில் சேவைகளில் அதிரடி மாற்றங்கள்!
நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் ராசிபுரம் நகராட்சி உழவர் சந்தையில் தேர்தல் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வேட்பாளராக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்