February 7, 2026

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிப்பு – பா.ரஞ்சித் எழுப்பிய கேள்வி

பா.ரஞ்சித்

சென்னை: “தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா? ” என்று இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறந்த திரைப்​படங்​கள், நடிகர், நடிகைகளுக்கு தமிழக அரசு சார்​பில் விருதுகள் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன. அதன்படி, 2016 முதல் 2022 வரையி​லான 6 ஆண்​டு​களில் வெளி​யான திரைப்​படங்​களில் சிறந்த தமிழ்த் திரைப்​படங்​கள், சிறந்த நடிகர், நடிகைகள், தொழில்​நுட்​பக் கலைஞர்​களுக்கு தமிழக அரசின் விருதுகள் நேற்று அறிவிக்​கப்​பட்டன.

நடிகர்​கள் விஜய்​சேதுப​தி, கார்த்​தி, தனுஷ், ஆர்​.​பார்த்​திபன், சூர்​யா, ஆர்​யா, விக்​ரம் பிரபு ஆகியோர் சிறந்த நடிகர்​களாக​வும், நடிகைகள் கீர்த்தி சுரேஷ், நயன்​தா​ரா, ஜோதி​கா, மஞ்​சு​வாரி​யர், அபர்​ணா​பால​முரளி, லிஜோமோல்​ஜோஸ், சாய்​பல்​லவி ஆகியோர் சிறந்த நடிகைகளாக​வும் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.‘மாநகரம்’, ‘அறம்’, ‘பரியேறும் பெரு​மாள்’, ‘அசுரன்’, ‘கூழாங்​கல்’, ‘ஜெய்​பீம்’, ‘கார்கி’ ஆகியவை சிறந்த திரைப்படங்களாக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளன. 

இந்நிலையில், பா.ரஞ்சித் இந்தக் கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் நாடு அரசு திரைப்பட விருதுகள் அறிவித்துள்ள இச்சூழலில், உங்களிடம் ஒரு கேள்வி? தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் அரசு மற்றும் தனியார் விருது அமைப்புகள் உண்மையாகவே நேர்மையாக செயல்படுகிறதா?

Spread the love