தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நடந்த நிலையில், இன்று அதிகாலை திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார் தவெக தலைவர் விஜய். இதனையடுத்து மீண்டும் அவர் சென்னைக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அடுத்ததாக தவெக வேட்பாளர்களை சந்திப்பதற்கு விஜய் திட்டமிட்டுள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன. வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரையிலும் நிர்வாகிகள், தொண்டர்கள் கவனமுடன் இருக்குமாறும் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைமை அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் அடுத்தக்கட்ட திட்டம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தவெக விஜய்யின் அடுத்தக்கட்ட நடவடிக்கை
தமிழக வெற்றி கழகத்தின் தலைவரான விஜய் இன்று திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றிருந்தார். சட்டமன்ற தேர்தல் முடிந்து நான்கு நாட்கள் ஆகியுள்ள நிலையில், இன்று சாமி தரிசனத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து அடுத்ததாக தவெக வேட்பாளர்களை சென்னையில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வேட்பாளர்களுடன் சந்திப்பு
தமிழக வெற்றி கழகத்துடன் மற்ற கட்சிகள் யாரும் கூட்டணி அமைக்க முன்வராத நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் முடிவினை தவெக எடுத்தது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் வரும் 30 ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்களை சென்னையில் வைத்து விஜய் சந்திப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மே நான்காம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் கடைபிடிக்க வேண்டியவை குறித்து சில முக்கியமான அறிவுரைகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே எடப்பாடியில் தவெக வேட்பாளரை விலை கொடுத்து வாங்கி விட்டதாக ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டி இருந்தார். அதுபோன்ற ஒரு சம்பவம் தேர்தல் முடிவுக்கு பின்பு நடக்கக்கூடாது என்பதற்காக இந்த சந்திப்பு நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
திருசெந்தூர் பயணம்
இதனிடையில் விஜய் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று நள்ளிரவு 11.30 மணி அளவில் நீலாங்கரை வீட்டில் இருந்து கிளம்பி தனி விமானம் மூலமாக 2 மணி அளவில் மதுரை விமான நிலைத்து வந்தார். அங்கிருந்து திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்ற விஜய், சாமி தரிசனம் மேற்கொண்டார். அதன்பின்னர் அங்கிருந்து மீண்டும் சென்னைக்கு வந்து சேர்ந்து விட்டார்.
புதுச்சேரியிலிருந்து மதுபானம் கொண்டு வரும் விவகாரம்.. நீதிமன்றத்தில் அரசு முறையீடு
ஜோதிடர் ஆலோசனை
இதற்கிடையில் ஜோதிடர் ஆலோசனை பேரில் விஜய் திருச்செந்தூர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் கட்சி துவங்கியதில் இருந்து மாநாடு, பரப்புரை ஆகியவற்றை ஜோதிடர் ஆலோசனை பேரில் தான் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று திருச்செந்தூர் கோவிலுக்கு பயணம் செய்துள்ளார். தொடர்ந்து அவர் ஸ்ரீரடி சாய் பாபா கோவிலுக்கும் செல்வதற்கு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இரண்டு தொகுதிகளில் போட்டி
நடிகர் விஜய் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்துள்ள நிலையில் முதல் தேர்தலிலே இரண்டு தொகுதிகள் போட்டியிட்டுள்ளார். பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு இடங்களில் அவர் களமிறங்கியுள்ளார். இதனிடையில் விஜய்யின் அரசியல் வருகையால் இந்த தேர்தலில் வாக்குகள் பிரிந்துள்ளதாக கூறப்படுகிறது. இது யாருக்கு சாதகமாக அமையும் என்பது அரசியல் களத்தில் மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. அதே போல் சசிகலா, ராமதாஸ் ஆகியோராலும் நடந்து முடிந்துள்ள தேர்தலில் வாக்குகள் பிரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More Stories
“வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக, கூட்டணிக் கட்சி முகவர்கள் கவனம்” – இபிஎஸ் அறிவுரை
“ஏளனம் பேசியோருக்கு செயல் மூலம் தவெகவினர் பதிலடி” – விஜய் பெருமிதம்
“பாஜகவின் முதல் அடிமை யார் என போட்டி…” – திமுக, அதிமுக மீது தவெக தலைவர் விஜய் தாக்கு