திண்டுக்கல்.ஏப்.30-
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், (டார்ன்காம்) மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு திறன் மையம் இயந்திரவியல் துறை வளாகத்தில் திறக்கப்பட்டது
நிகழ்ச்சியில் புதுமை மற்றும் தொழில்துறை அனுபவத்தின் மூலம் எதிர்காலத்திற்குத் தயாரான பொறியாளர்களை உருவாக்கும் தொழில்-கல்வி இணைப்பின் தொடக்கமாக இது கருதப்படுகிறது. மேம்பட்ட உற்பத்தி, டிஜிட்டல் பொறியியல் மற்றும் தொழில் நோக்கப் பயிற்சி ஆகிய துறைகளில் மெக்கானிக்கல், சிவில், இ. இ.இ மாணவர்களுக்கும் மற்றும் பேராசிரியர்களுக்கும் உலகத் தரச் வசதிகளை வழங்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.
கல்லூரியின் முதல்வர் முனைவர் து.வாசுதேவன் அனைவரையும் வரவேற்று பேசினார் வழங்கினார். டசால்ட் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ராஜீவ் அரமடகா முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு டார்ன்காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விஜயதீபன் மற்றும் மூத்த துணைத் தலைவர் முனைவர் ஒளிவண்ணன் சிறப்புரை வழங்கினர். ஹைடெக் அராய் நிறுவனத்தின் மேலாளர் சுந்தர் இம்மையத்தின் முக்கியத்துவத்தையும், அதை மாணவர்கள் பயன்படுத்தும் முறையை பற்றியும் விளக்கி கௌரவ விருந்தினர் உரையை நிறைவு செய்தார்.
இவ்விழாவில் கல்லூரியின் அனைத்து துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் மற்றும் மாணவ, மாணவிகளும் பங்கேற்றனர். இறுதியில் முனைவர்மீனா நன்றியுரை ஆற்றினார்.
திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில்( டார்ன்காம்) மேம்பட்ட உற்பத்திக்கான சிறப்பு திறன் மையம் திறப்பு விழா.

More Stories
மெட்ரோ பயணிகளே அலர்ட்! நாளை முதல் பழைய கார்டுகள் செல்லாது; உடனே இதைச் செய்யுங்க!
நாலுமாவடி பன்னோக்கு மிஷன் மருத்துவமனையில் பிறந்த 500வது குழந்தைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் நினைவு பரிசு வழங்கினார்.
தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய அரசு மருத்துவர்கள்