August 26, 2026

திருப்பூரில் தேமுதிக சார்பில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பிறந்த தின விழா

திருப்பூரில் பத்மபூஷன் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 74வது பிறந்தநாள் விழா திருப்பூர் மாநகர் மாவட்டம் கழகம் சார்பில் பல்வேறு இடங்களில் கழக கொடி ஏற்றி வைத்தும் , மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் விழாவும், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் பாண்டியன்நகர் பகுதி கழக செயலாளர் சரவணன், வரவேற்புரையாற்றினார். 2 வது வட்ட செயலாளர் கிட்டுசாமி முன்னிலை வகித்தார் . திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. விசைத்தறி பி.ஆர் குழந்தைவேல் அவர்கள் தலைமை ஏற்று கழக கொடியேற்றி நலதிட்ட உதவிகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்வில் மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு.ராயபுரம் ஆனந்த் அவர்கள், மாவட்ட துணைச்செயலாளர் வசந்த் யுவராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். திருப்பூர் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், வீரபாண்டி பகுதி கழக செயலாளர் பெஸ்ட் ராமு, மாவட்ட கேப்டன் மன்ற துணைச்செயலாளர் கணேசமூர்த்தி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் புனிதா, மல்லிகா, ஜினத் பேகம், மாவட்ட தொண்டரணி செயலாளர் செல்வக்குமார் துணைச்செயலாளர்கள் செல்வராஜ்,தேவராஜ் மாவட்ட இளையதள அணி துணைச்செயலாளர் தினேஷ், 1 வது வட்ட செயலாளர் ஜெயராஜ், 3 வது வட்ட ஶ்ரீகாந்த்

பகுதி கழக நிர்வாகிகள் ராஜேந்திரன் ரமேஷ் பிரியா மகாதேவன் பிரான்சிஸ் செந்தில்குமார் குமரேஷ் சரவணன் குமரவேல் லியோ மோட்சராஜ் ராதாகிருஷ்ணன் திருமூர்த்தி பிரியா சூரியன்.மாவட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அருணாச்சலம், தினேஷ்குமார்,மாவட்ட நிர்வாகிகள் பகுதி நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் மகளிர் அணியினர் பெருந்திரளாக பங்கேற்று பிறந்தநாள் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்

Spread the love