சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டு தோறும் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நாளை (மே 1) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி புஷ்பப் பல்லக்கு சேவை நேற்று இரவு நடைபெற்றது.
பல்வேறு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய எம்பெருமானை திரளான பக்தர்கள் தரிசித்து பரவசமடைந்தனர். தொடர்ந்து இன்று (30-ம் தேதி) அங்குரார்ப்பணம் எனும் முளையிடுதல் விழா நடக்கிறது.
மே 1-ம் தேதி (நாளை) கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் தொடங்குகிறது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடக்கிறது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 7-ம் தேதி நடைபெறுகிறது. 8-ம் தேதி பல்லக்கில் வெண்ணெய் தாழி கண்ணன் திருக்கோலத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
9-ம் தேதி காலை 6.15 மணிக்கு ஆளும் பல்லக்கு, காலை 11 மணிக்கு தீர்த்தவாரி நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்க நிகழ்வு நடைபெறும். 10-ம் தேதி இரவு 10 மணிக்கு சிறிய திருத்தேர் நிகழ்வுடன் விழா நிறைவடைகிறது.

More Stories
பெங்களூரு ஆலங்கட்டி மழை… ஐஸ்லாந்து மாறி வெள்ளையாய் மாறிய நகரம்- பின்னணி காரணம்!
தேர்தல் முடிந்ததும் விசிகவில் அதிரடி மாற்றம்.. திருமாவளவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
முதலைமைச்சர் வேட்பாளர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு எவ்வளவு.. எங்கு அதிகம்?