தில்லியில் ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக தரையிறங்கியது பற்றி…

ஸ்பைஸ்ஜெட்கோப்புப்படம்
தில்லியில் இருந்து லேவுக்கு புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் என்ஜின் கோளாறு காரணமாக செவ்வாய்க்கிழமை காலை அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் போயிங் 737 ரக விமானம் தில்லி சர்வதேச விமானத்தில் இருந்து லே விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை 6.45 மணியளவில் புறப்பட்டுள்ளது.
இந்த விமானத்தில் 150 பயணிகள் இருந்த நிலையில், புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் இரண்டாவது என்ஜினில் பிரச்னை இருப்பதை விமானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, ’முழு அவசர தரையிறக்க’த்துக்கு விமானக் கட்டுப்பாட்டு அறையிடம் அனுமதி கோரப்பட்டது. உடனடியாக தில்லி விமான நிலையத்தில் அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விமானத்தை தரையிறக்க உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, எவ்வித அசம்பாவிதமும் இன்றி விமானத்தை விமானிகள் பாதுகாப்பாக தரையிறக்கினர்.
விமானத்தில் இருந்த அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக இருப்பதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் என்ஜின் கோளாறு எதனால் ஏற்பட்டது என்பது குறித்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
‘காந்தாரா’ மிமிக்ரி சர்ச்சை: நடிகர் ரன்வீர் சிங்குக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டிப்பு
‘‘சமூகத்தை ஒன்றிணைக்க பொது சிவில் சட்டம் அவசியம்’’: மோகன் பாகவத்
ஹரியானா அரசு கணக்கில் ரூ.590 கோடி மோசடி – ஐடிஎப்சி வங்கி ஊழியர்களின் பணப் பரிமாற்றம் குறித்து ஆய்வு