ஆண்டிபட்டி, செப் 13,
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் அமைந்துள்ள தி லிட்டில் ப்ளவர் பள்ளியில், “பெற்றோர்களை கொண்டாடுவோம்!” என்ற சிறப்பு நிகழ்ச்சி ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து ஆசிரியர் தின விழாவாகசிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழா பள்ளியின் தாளாளர் ஹென்றி அருளானந்தம் மற்றும் தாளாளர் மனைவி தமயந்தி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக ஆர். பெருமாள்சாமி (முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர்) கலந்து கொண்டு, ஆசிரியர்களின் சிறப்பையும், கல்வித்துறையில் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பையும் எடுத்துரைத்தார்.
மேலும் செந்தில் குமார் (முன்னாள் கண்காணிப்பாளர், முதன்மை கல்வி அலுவலகம்) அவர்களும் விழாவில் பங்கேற்றுக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
பள்ளியின் செயலாளர் மேத்யூ ஜோயல் ஆசிரியர்களின் சிறப்பைப் போற்றும் வகையில் சிறப்புரையாற்றினார். பள்ளியின் முதல்வர் உமாமகேஸ்வரி மாணவர்களின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் ஆசிரியர்களின் முக்கியப் பங்கு குறித்து உரையாற்றினார்.
விழாவின் சிறப்பம்சங்களாக ஆசிரியர்களின் சிறப்பு நடன நிகழ்ச்சிகள், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தன.
சுதந்திர தின விழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவில் கலந்து கொண்ட பெற்றோர்கள் அனைவருக்கும் அன்பளிப்பும் மதிய உணவும் வழங்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் கேக்குகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக மேற்கொண்டனர். ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிணைந்து கொண்டாடிய இவ்விழா, பள்ளியின் ஒற்றுமையையும் கல்விச் சமூகத்தின் அன்பையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அனைவரும் பாராட்டினார்கள்.

More Stories
திராவிட முன்னேற்றக் கழகம் சாப்பில்முதல்-அமைச்சரின் ஆவண பேச்சை கண்டித்து திருப்பூரில் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தேனி மாவட்டம்
கீழக்கரை நுகர்வோர் நலச்சங்க கூட்டம்