August 10, 2026

தேசிய சின்னங்களை அவமதிப்போர் இந்தியாவில் வாழ முடியாது: உ.பி. முதல்வர் யோகி கருத்து

லக்னோ: தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்​னங்​களை அவம​திப்​போர், இந்​தி​யா​வில் வாழ முடி​யாது என்று உத்தர பிரதேச முதல்​வர் யோகி ஆதித்யநாத் தெரி​வித்​துள்​ளார்.

சுதந்​திர தினத்தை ஒட்டி உத்தர பிரதேச தலைநகர் லக்​னோ​வில் நேற்று மூவர்​ணக் கொடி யாத்​திரை நடை​பெற்​றது. இதில் முதல்வர் யோகி ஆதித்​ய​நாத் பேசி​ய​தாவது: தேசிய பாடலான வந்தே மாதரத்​தின் 150-வது ஆண்டை கொண்​டாடி வரு​கிறோம். காங்​கிரஸ் ஆட்​சி​யில் சந்​திரசேகர் ஆசாத், ராணி லட்​சுமி​பாய், உதா தேவி உள்​ளிட்ட பெரும்​பாலான சுதந்​திரப் போராட்ட தலைவர்​கள் புறக்​கணிக்​கப்​பட்​டனர். கடந்த 2014-ம் ஆண்​டில் பிரதமர் நரேந்​திர மோடி ஆட்​சிப் பொறுப்பை ஏற்​றார்.

இதன் பிறகு அனைத்து சுதந்​திர போராட்​டத் தலை​வர்​களுக்​கும் உரிய மரி​யாதை அளிக்​கப்​பட்​டது. தற்​போது 140 கோடி இந்தியர்களும் சுதந்​திர தினத்​தில் தேசி​யக் கொடியை ஏற்றி மகிழ்கின்றனர். தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்​னங்​கள், தேசிய தலை​வர்​களை அவம​திப்​போர், இந்​தி​யா​வில் வாழ முடியாது. வந்தே மாதரம் பாடலை அவம​திப்​போருக்கு சிறை தண்டனை விதிக்க வகை செய்​யும் சட்​டம் நாடாளு​மன்​றத்​தில் அண்​மை​யில் நிறைவேற்​றப்​பட்​டது.

இதற்​காக பிரதமர் நரேந்​திர மோடிக்கு மனதார நன்​றியைத் தெரிவித்​துக் கொள்​கிறேன். இந்​தி​யா​வுக்கு எதி​ராக செயல்படுவோர் தற்​போது சமூக வலை​தளங்​களில் பொய்களையும் வதந்​தி​களை​யும் பரப்பி வரு​கின்​றனர். சமூகத்தில் ஒற்​றுமையை சீர்​குலைக்க அவர்​கள் தீவிர முயற்சி செய்​கின்​றனர். அவர்​களின் சதி​களை முறியடிக்க வேண்​டும்.

Spread the love