தேனி:ஆகஸ்ட் 8
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வருசநாடு மற்றும் மேகமலை பகுதி கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான மலைக்கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகப் பகுதியைக் காரணம் காட்டி, தங்களது விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து வெளியேற வனத்துறை அழுத்தம் கொடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
: வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாண்டுகளாக வசித்து வரும் தங்களை எந்த காரணத்தை கொண்டும் அப்புறப்படுத்தக் கூடாது.
வன உரிமைச் சட்டப்படி பட்டா: பாரம்பரியமாக சாகுபடி செய்து வரும் நிலங்களுக்கு உடனடியாக பட்டா வழங்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் வனப்பகுதி எனக் கூறி சாலை சீரமைப்பு, மின்சாரம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பப் பெற வேண்டும்.
வாழ்வாதார பாதுகாப்பு விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பதையே வாழ்வாதாரமாக கொண்டுள்ள தங்களை அப்புறப்படுத்தினால் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கும் என அச்சம் தெரிவித்தனர்.
முடிவில் தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை அனைத்து கட்சி சார்பாக மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனிடம் அளித்தனர்.
பாரம்பரிய நில உரிமைகளை பாதுகாத்து, வாழ்விடத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையை கைவிடாவிட்டால், ஆண்டிபட்டி தொகுதி முழுவதிலும் உள்ள மக்களை திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக போராட்டக்குழுவினர் எச்சரித்தனர். போராட்டத்தில் தங்கதமிழ்செல்வன் எம்.பி.மகாராசன் எம்.எல்.ஏ.அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ராமர், கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
ஈரோடுமாவட்டம்
பழனியில் ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் அன்வர் தீன் மரணம் அடைந்தார்
07-08-2026