February 7, 2026

‘தேவரா 2’ படப்​பிடிப்பு எப்போது?

கொரட்​டலா சிவா இயக்​கத்​தில் ஜூனியர் என்​.டி.ஆர், ஜான்வி கபூர், சைஃப் அலி கான், பிர​காஷ்​ராஜ் உள்​ளிட்ட பலர் நடிப்​பில் வெளி​யான திரைப்​படம் ‘தேவரா’.

தெலுங்​கில் உரு​வான இப்​படம், தமிழ், இந்தி உள்பட 5 மொழிகளில் வெளி​யானது. படப்​பிடிப்பு பாதி முடிந்த நிலை​யில், இரண்டு பாக​மாக இப்​படம் வெளி​யாகும் என்று இயக்​குநர் கொரட்​டலா சிவா அறி​வித்​திருந்​தார்.

பெரும் எதிர்​பார்ப்​புக்கு இடையே கடந்த 2024-ம் ஆண்டு செப்​டம்​பரில் வெளி​யான இப்​படம் கலவை​யான விமர்சனங்​களை எதிர்​கொண்​டது. இருந்​தா​லும் ரூ.428 கோடி வசூலித்​தது. இந்​நிலை​யில் இப்​படம் விமர்சன ரீதியாக வரவேற்​பைப் பெறாத​தால் இதன் 2-ம் பாகம் கைவிடப்​பட்​ட​தாகச் செய்​தி​கள் வெளி​யா​யின.

இந்​நிலை​யில் நிகழ்ச்சி ஒன்​றில் கலந்து கொண்ட இப்படத்தின் தயாரிப்​பாளர் சுதாகர் மிக்​கி​லினேனியிடம் இதுபற்றி கேட்​ட​போது, “தேவரா 2 படம் நிறுத்தப்படவில்லை. மே மாதம் படப்​பிடிப்பு தொடங்க இருக்​கிறது. 2027-ம் ஆண்டு படம் வெளி​யாகும். கண்டிப்பாக சூப்​பர் ஹிட்​டாகும்” என்​றார். நடிகர் ஜூனியர் என்​.டி.ஆர். இப்​போது பிர​சாந்த் நீல் இயக்​கும் ‘டிராகன்’ படத்​தில் நடித்து வரு​கிறார்.

Spread the love