100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயண பேரணி தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தேனி, மார்ச் 19,தேனி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயண பேரணியை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். தமிழ்நாட்டில் 2026 பொதுதேர்தல் நடைபெறவுள்ளதை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிக்கை அனுப்பியுள்ளது. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் 100 சதவீதம் வாக்குபதிவை வலியுறுத்தி, பொதுமக்களிடம் விழிப்புணர்வு நடைபயண பேரணி தொடங்கப்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி, பெரியகுளம், போடிநாயக்கனூர், கம்பம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியில் இந்த நடைபயண விழிப்புணர்வு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேனி பங்களாமேட்டில் தொடங்கிய நடைபயண பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சி தலைவர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். இந்த பேரணி பழைய பேருந்துநிலையம் நேரு சிலைவழியாக சென்று தேனி உழவர்சந்தையில் நிறைவடைந்தது. இந்த பேரணியில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள், மாணவிகள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி சென்றனர். மேலும் ஆட்சியர் ரஞ்ஜித்சிங் வாக்களிப்பதின் அவசியம் குறித்த கை பிரதிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகுமார், மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எடிசன், வட்டாச்சியர் சதீஸ்குமார், மகளிர் சுயஉதவிகுழு பெண்கள் , பெண்கள்கல்லூரி ,மாணவியர்கள் கலந்துகொண்டனர்.
நடைபயண பேரணி தேனி மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

More Stories
07-08-2026
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்