நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல்நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திடீர் மூச்சுத் திணறல் காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி இரவு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனைத்தொடர்ந்து கடந்த 20 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு உடல்நிலை நேற்று இரவு முதல் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
வயது மூப்பு காரணமாக கடந்த 7 மாதங்களாகவே கால இடைவெளியில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நல்லகண்ணு உடலில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து உறவினர்கள் தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் வீரபாண்டியன், முத்தரசன் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் வந்த வண்ணமே உள்ளனர்.

More Stories
பழனி அருகே முத்து நாயக்கன்பட்டியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு ரேக்ளா மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதை அமைச்சர் அர.சக்கரபாணி தொடங்கி வைத்தார். அருகினில் பொதுக்குழு உறுப்பினர் மகுடீஸ்வரன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்
கொச்சியில் விருது பெற்ற தேவிகள்!
திருச்சியில் அமித் ஷாவுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு: காரைக்கால் புறப்பட்டார்!