இது குறித்து, மாநகராட்சி ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் திருத்திய சட்டத்தின்படி, 2025&26ம் நிதியாண்டு வரை, வரி மற்றும் கட்டணங்களை செலுத்த வேண்டிய கால அவகாசம், 2025 அக். 31ம் தேதி முடிவடைந்துவிட்டது.
உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்களை பெற்றால் மட்டுமே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, மாநகராட்சியால் முறையாக வழங்க இயலும்.
இவற்றை கருத்தில் கொண்டு, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், 2025-26ம் நிதியாண்டிற்கு சொத்துவரி, காலிமனைவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை கட்டணம், தொழில் லைசென்ஸ் கட்டணம் உள்ளிட்ட வரி மற்றும் கட்டணங்களை, இதுநாள்வரை செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ள பொதுமக்கள் அனைவரும், உடனடியாக தங்களது வரி மற்றும் கட்டணங்களை நிலுவையின்றி செலுத்த வேண்டும்.
பொதுமக்கள் தங்களது வரி மற்றும் கட்டணங்களை நாமக்கல் மாநகராட்சி அலுவலகம், மோகனூர் ரோடு மற்றும் ரெட்டிப்பட்டியில் இயங்கிவரும் கம்ப்யூட்டர் வரிவசூல் மையங்களிலும், https://tnurbanepay.tn.gov.in/ என்ற ஆன்லைன் முகவரியிலும், ஜிபே, ஃபோன்பே, பேடீஎம் உள்ளிட்ட யுபிஐ மூலமாகவும் செலுத்தலாம்.
பொதுமக்களின் வசதிக்காக தினமும் காலை 8 முதல், இரவு 7 மணி வரை மற்றும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வரிவசூல் மையங்கள் இயங்கி வருகின்றன. உரிய காலத்தில் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தி, மாநகராட்சியின் மக்கள் நலப்பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

More Stories
கோரிக்கைகளை நிறைவேற்றாத தமிழக அரசு: 2026 சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் மலைவாழ் மக்கள்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. DSP சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து… கால்களை இழந்த இளைஞர்கள்…