நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாற்றுவதற்கு, வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் முதற்கட்டமாக தேர்வு செய்யும் பணி நடந்தது.
மாவட்ட ஆட்சியர் கலெக்டர் துர்காமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: தமிழக சட்டசபை தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, 6 சட்டசபை தொகுதிகளில், 1,780 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
வாக்குச்சாவடி மையங்களில், ஏப். 23ம் தேதி வாக்குப்பதிவின்போது, தேர்தல் பணியாற்றும் வகையில், ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும், தலா ஒரு முதன்மை அலுவலர், 3 நிலைகளிலான வாக்குச்சாவடி அலுவலர்கள் என மொத்தம் 4 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராசிபுரம் தொகுதியில், 285 வாக்குச்சாவடிகளுக்கு 1,533 அலுவலர்கள், சேந்தமங்கலத்தில் 304 வாக்குச்சாவடிகளில் 1,274 பேர், நாமக்கல்லில், 310 வாக்குச்சாவடிகளில் 2,268 பேர், ப.வேலூரில் 268 வாக்குச்சாவடிகளில் 1,065 பேர், திருச்செங்கோட்டில் 289 வாக்குச்சாவடிகளில் 1,499 பேர், குமாரபாளையம் தொகுதியில், 324 வாக்குச்சாவடிகளில் 905 பேர் என, மொத்தம் 1,780 வாக்குச்சாவடிகளுக்கு 8,544 அலுவலர்கள், ஆன்லைன் முறையில் கம்ப்யூட்டர் குலுக்கல் மூலம் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
டி.ஆர்.ஓ.,க்கள் சரவணன், கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுஜாதா, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.

More Stories
25 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி கொடுத்த கவுன்சிலருக்கு பொதுமக்கள் பாராட்டு
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருநர் உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தைத் திணிக்கக் கூடாது: முதல்வர் ஸ்டாலின்