தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 முன்னிட்டு வேட்பு மனு தாக்கல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இராசிபுரம் (தனி) சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் மா. மதிவேந்தன், இராசிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், இராசிபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட வழங்கல் அலுவலர் முருகனிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் உறுதிமொழி பத்திரத்தை வாசித்து, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த வேட்பு மனு தாக்கலின்போது, வேட்பாளர் உடன், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் K.P. இராமசுவாமி, நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் செந்தில், உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் 4 பேர் உடன் இருந்தனர்.
இந்த வேட்பு மனு தாக்கல் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் / அமைச்சர் மா. மதிவேந்தன்,
திமுக, மீண்டும் 2026ல் ஆட்சி அமைக்கும் வகையில், கடந்த 5 ஆண்டுகள் திமுக ஆட்சியில் எண்ணற்ற பல மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக நிறைவேற்றப்பட்டன.
ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், அனைத்து மக்களையும் சந்தித்து திமுக அரசின் ஐந்தாண்டு சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை பிரச்சாரம் செய்ய உள்ளோம்.
கடந்த 5 ஆண்டுகளில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் திமுக ஆட்சியில் இதுவரை செய்யாத பல வரலாற்று சாதனைகளை செய்துள்ளோம். ஆனால், 2011 2016 அதிமுக ஆட்சி காலத்தில் இந்த தொகுதியில் சபாநாயகராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்யத் தவறிய பல்வேறு வளர்ச்சி பணிகளை, அடிப்படை வசதிகளை நாங்கள் செய்துள்ளோம்.
ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் , தலைமை மருத்துவமனை, டைடல் பார்க் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, போதமலைக்கான 140 கோடி ரூபாய் சாலை, நாரைக்கிணறு பகுதி மக்களுக்கு நில அளவை செய்யப்படாத நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு பட்டா வழங்கப்பட்டுள்ளது. ராசிபுரம் புறநகர் பேருந்து நிலையம், விளையாட்டு அரங்கம், அனைத்து நகர பகுதிகளிலும் சாலை மேம்பாட்டு பணிகள், சாக்கடை தெருவிளக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் மீதும் கூட்டணி மீது மக்கள் அளப்பரிய நம்பிக்கை வைத்துள்ளார்கள். மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம், கலைஞர் கனவு இல்லம், தமிழ் புதல்வன், புதுமைப்பெண் என ஒவ்வொரு குடும்பமும் மாதம் ஒன்றுக்கு நடுத்தர குடும்பத்தினர் 3,000 ரூபாய் வரை சேமிக்க கூடிய பல்வேறு திட்டங்களை சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
திமுக தலைவர் நம்பிக்கை அளிக்கும் புதிய தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். வரலாறு காணாத வெற்றியை பெற உள்ளோம்.
இனிவரும் ஐந்தாண்டுகளில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில், விடுபட்ட சாலைகள் மேம்படுத்தப்படும். கழிவு அகற்றுதல், சாக்கடை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுகாதாம் காக்கப்படும். வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய பல்வேறு திட்டங்கள், நீர் ஆதார திட்டங்கள், பல்வேறு தரப்பு மக்கள் கருத்துக்களை கேட்டு நிறைவேற்றப்படும். அனைத்து தேவைகளையும் தீர்வு காணும் வகையில் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமையும் என்றும் திமுக வேட்பாளர் /அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

More Stories
இராசிபுரம்: 5 ஆண்டு சாதனையை பட்டியலிட்ட அமைச்சர் மா.மதிவேந்தன்…
திருப்பூர் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்
பழனி முருகன் மலைக்கோவில் சன்னதியில் பங்குனி உத்திரம் திருவிழாவையொட்டி, நேற்று பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தனர்.