தமிழக நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் கடந்த மூன்று ஆண்டுகளாக முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் சிக்மா, வித்யா ஆகிய மேலும் இரண்டு பதிப்பகங்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அகல் விளக்கு பதிப்பகத்துக்கு ரூ.1.74 கோடி வழங்கப்பட்டு, அதன் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு அதிகாரிகளிடம் விசாரணை நடைபெறுவதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பதிப்பக உரிமையாளர் மோகனை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முறைகேடு தொடர்பான புத்தகங்கள் நூலகங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளன.
விசாரணையை உயர்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்ற உத்தரவு நகலைத் தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அவகாசம் கோரியதால், வழக்கு நவம்பர் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

More Stories
சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் திருக்கார்த்திகை தேரோட்டம்
“பெண் ஆட்சியர் புகார் மறைக்கப்பட்டதா?” – முதல்வர் விளக்கமளிக்க உதயநிதி கோரிக்கை
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் அதிகாலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்