August 29, 2026

நேபாள வெள்ளம் – ‘முதல் மீட்புப் படை’யாக இந்தியா முன்னிலை

காத்மாண்டு: நேபாளத்​தில் ஏற்​பட்​டுள்ள வெள்​ளப் பெருக்​கால் அங்கு பேரழிவு ஏற்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பான தகவல் கிடைத்ததும், கடந்த புதன்​கிழமை இரவு சுமார் 8.35 மணி​யள​வில், இந்​திய விமானப் படை​யின் சி-130ஜே ரக விமானம், நேபாளத்துக்கு 10 டன் மனி​தாபி​மான மற்​றும் பேரிடர் நிவாரணப் பொருட்​களை ஏற்​றிக்​கொண்டு இந்தியா​வில் இருந்து புறப்​பட்​டது.

சுற்​றுச்​சூழல் ரீதி​யாக மிக​வும் பாதிக்​கப்​படக் கூடிய இமயமலை நாடான நேபாளத்தை உயி​ரிழப்​பு​களை ஏற்​படுத்​திய திடீர் வெள்ளம் தாக்​கிய 12 மணி நேரத்​துக்​குள் இந்த விமானம் புறப்பட்டது. முதல் கட்ட நிவாரணப் பொருட்​கள் அன்​றிரவே தலைநகர் காத்​மாண்​டுவை சென்​றடைந்​தன.

இந்​தி​யா​வின் இந்த விரை​வான நடவடிக்​கை, மனி​தாபி​மான மற்​றும் பேரிடர் நிவாரணப் பணி​கள் ‘முதல் மீட்​புப் படை’ என்ற இந்​தி​யா​வின் நிலையை மேலும் வலுப்​படுத்​தி​யுள்​ளது.

இந்​தி​யா​வின் இந்த விரை​வான நடவடிக்​கை, கரோனா காலத்​தில் ஆப்​பிரிக்க நாடு​கள் உள்​ளிட்ட பல்​வேறு நாடு​களுக்கு தடுப்​பூசிகள் வழங்​கியது முதல், 2023-ல் நிலநடுக்​கத்​தால் பாதிக்கப்பட்ட துருக்கி மற்​றும் சிரி​யா​வில் மேற்​கொண்ட மீட்பு மற்​றும் நிவாரணப் பணி​கள், 2024-ல் பேரிட​ரால் பாதிக்​கப்​பட்ட மியான்​மர், 2025-ல் புய​லால் பாதிக்​கப்​பட்ட இலங்​கை, 2026-ல் நிலநடுக்​கத்​தால் பாதிக்​கப்​பட்ட வெனிசுலா உள்​ளிட்ட நாடுகளுக்கு வழங்​கிய உதவி​கள் வரையி​லான அதன் விரி​வான மனிதாபி​மான நடவடிக்​கை​களின் தொடர்ச்​சி​யாகும்.

நேபாளத்​தின் செல்​வாக்​கைப் பெறு​வ​தில் வரலாற்று ரீதி​யாக இந்​தி​யா​வுடன் போட்​டி​யிட்டு வரும் சீனா, அவசர​கால நிவாரணப் பொருட்​கள் மற்​றும் நிதி​யுத​வியை ஒருங்​கிணைத்து வரு​வ​தாக அந்​நாட்​டின் நேபாளத்​துக்​கான தூதர் தெரி​வித்​துள்​ளார்.

எனினும், அந்த நிதி​யைப் பரி​மாற்​றம் செய்​வதற்​கும், நிவாரணப் பொருட்​களை வழங்​கு​வதற்​கு​மான முறை​யான நடை​முறை​கள் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்லை என்று உள்​ளூர் ஊடகங்​கள் தெரி​வித்​துள்​ளன.

Spread the love