August 14, 2026

நேரு விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம்: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திறந்து வைத்தார்

சென்னை: சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்​டரங்​கில் ரூ.8 கோடி செல​வில் புதுப்​பிக்​கப்​பட்ட செயற்கை இழை தடகள ஓடு​தளத்தை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா நேற்று திறந்து வைத்​தார்.

தமிழ்​நாடு விளை​யாட்டு மேம்​பாட்டு ஆணை​யத்​தின் மூலம் தமிழக விளை​யாட்டு வீரர்​களுக்கு தேசிய, பன்​னாட்டு தரத்​துக்கு இணை​யான பயிற்சி வசதி​கள் கிடைக்​கும் வகை​யிலும், விளை​யாட்டு உட்​கட்​டமைப்பு வசதி​களை மாவட்​டந்​தோறும் விரிவுபடுத்​தும் நோக்​கிலும் கடந்த 3 மாதங்​களில் சென்​னை, அரியலூர், திரு​வண்​ணா​மலை, திண்​டுக்​கல், கிருஷ்ணகிரி, விருதுநகர், விழுப்​புரம், கடலூர், தரு​மபுரி, தூத்​துக்​குடி ஆகிய மாவட்​டங்​களில் தடகள எறிதல் மையம், செயற்​கை​யிழை ஹாக்கி மைதானங்​கள், பாரா விளை​யாட்​டரங்​கங்​கள், முதல்​வர் விளை​யாட்டு அரங்​கங்​கள், நீச்​சல் குளம் ஆகியவை ரூ. 31 கோடி மதிப்​பீட்​டில் திறந்து வைக்​கப்​பட்​டுள்​ளன.

தடகள ஓடு​தளங்கள்

சென்​னை, கோவை, மதுரை, திருச்​சி, திருநெல்​வேலி, திரு​வண்​ணா​மலை, நீல​கிரி, ஈரோடு, தஞ்​சாவூர் ஆகிய 9 மாவட்​டங்​களில் செயற்கை இழை தடகள ஓடு​தளங்​கள் அமைக்​கப்​பட்டு பயன்​பாட்​டில் உள்​ளன. ராம​நாத​புரம், சேலம், கடலூர் ஆகிய 3 மாவட்​டங்​களில் ரூ.38.24 கோடி மதிப்​பில் புதிய செயற்கை இழை தடகள ஓடு​தளங்​கள் அமைக்​கும் பணிகள் நடை​பெற்று வரு​கின்​றன.

இதன் ஒரு பகு​தி​யாக சென்னை ஜவஹர்​லால் நேரு உள்​விளை​யாட்​டரங்​கம், ஒருங்​கிணைந்த விளை​யாட்டு வளாகத்​தில் ரூ.8 கோடி​யில் புதுப்​பிக்​கப்​பட்ட செயற்கை இழை தடகள ஓடு​தளத்தை விளை​யாட்​டுத் துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜுனா நேற்று திறந்து வைத்​தார்.

Spread the love