March 9, 2026

பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,800 புள்ளிகள் குறைந்தது!! காரணம்?

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி…

News image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று(மார்ச் 9) வரலாறு காணாத அளவுக்கு கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 77,056.75 புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,840.47 புள்ளிகள் குறைந்து 77,088.66 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 573.15 புள்ளிகள் குறைந்து 23,877.30 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

நிஃப்டி50 குறியீட்டில் இன்டர்குளோப் ஏவியேஷன், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ ஆகிய நிறுவனங்கள் அதிக இழப்பைச் சந்தித்தன.

நிஃப்டி மிட்கேப், ஸ்மால்கேப் இரண்டும் தலா 2.67 சதவீதம் சரிந்து வர்த்தகமாகின்றன.

துறை வாரியாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, கனரா வங்கி பங்குகள் சரிந்ததால் நிஃப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 6 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தன. நிஃப்டி வங்கி, நிதி சேவைகளும் மோசமாக செயல்பட்டு வருகின்றன. இதற்கிடையில், நிஃப்டி ஐடி பங்குகள் சற்று குறைவாகவே சரிவைச் சந்தித்து வருகின்றன.

பங்குச்சந்தை சரிவு, ஏன்?

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளதையடுத்து கச்சா எண்ணெய் விலை இதுவரை இல்லாத அளவுக்கு 21 சதவீதம் உயர்ந்து 112 டாலராக உள்ளது. 100 டாலருக்கும் மேலாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது இன்று பங்குச்சந்தையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.Advertise with us

ஈரானில் போர் நடைபெறுவதால் அங்கு முக்கிய ஏற்றுமதியான கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. முக்கியவழித்தடமான ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதைத் தொடர்ந்து குவைத், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் போன்ற முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகள், எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.

Spread the love