November 19, 2026

பழனியில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம்.

 பழனி நவம்பர் 19 

பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநிலத் தலைவர் ஏ எம் விக்ரமராஜா பங்கேற்றார்.பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், பழனி மாவட்ட 6-ஆம் ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு பழனி மாவட்டத் தலைவர் ஜே.பி. சரவணன் தலைமை வகித்தார். இதில் மாநில இணை செயலாளர் சரவணப்பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், மாநிலத் துணைத் தலைவர் கண்பத் கிரேண்ட் ஹோட்டல் அதிபர் என்.ஹரிஹரமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் மாநில தலைவர் ஏ.எம்.விக்ரமராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

 இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறுதமிழக முதலமைச்சர் முதல்வராக பொறுப்பேற்ற ஜோசப் விஜய்க்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது யு பி ஐ பண பரிவர்த்தனைகளுக்கான 0.4% சதவீத சேவை கட்டணத்தை நிறுத்தி வைக்க கோரிக்கை  நடவடிக்கை எடுத்த மாநில தலைவர் விக்ரமராஜா அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.பழனியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அறிவிக்க வேண்டும். கொடைக்கானலுக்கு போக்குவரத்து நெருக்கடியை குறைக்க வேண்டும். அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைத்து தர வேண்டும்பழனி டு கொடைக்கானல் ரோப்கார் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். என்பது உள்பட ஏராளமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது 

இந்நிகழ்ச்சியில் மாநிலப் பொருளாளர் சதக்கத்துல்லா, சித்தநாதன் சன்ஸ் எஸ் ஜி பழனிவேல், தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் கார்த்திக் ராஜன், நகர செயலாளரும் மிதுன்மனோகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளர் மணிமுத்து, நகர அதிமுக செயலாளர் யூ முருகானந்தம், கவுன்சிலர் காளீஸ்வரி பாஸ்கரன், மகளிர் அணி ரோகினி, வணிகர் சங்க பேரவை நிர்வாகிகள் மாவட்ட கவுரவத் தலைவர் கண்ணுச்சாமி, மாவட்டச் செயலாளர்கள் வள்ளுவர் தியேட்டர் அதிபர் செந்தில்குமார் மற்றும் ஜெகதீஷ், மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணன், மாவட்டச் செய்தித் தொடர்பாளர் ராதாகிருஷ்ணன், வழக்கறிஞர் மணி கண்ணன், வழக்கறிஞர் சஞ்சய் மணி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பழனிச்சாமி, ஈஸ்வரமூர்த்தி, ரஹ்மத்துல்லா, நகரத் தலைவர் பழனியப்பன், நகர செயலாளர் ஜெபக்கனி ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love