பழனி மார்ச் 24
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது வயலூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன் வயது 50. இவர் அதே பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியில் மேற்கு மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். தற்பொழுது அவர் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைமை பொதுக்குழு உறுப்பினராக பதவியில் உள்ளார். இவர் பழனி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்கு விருப்பம் மனு கொடுத்திருந்தார். சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக நேர்காணலில் பங்கேற்றார். இந்நிலையில் நேற்று பழனி வயலூரில் உள்ள அவரது வீட்டிற்கு, வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தினர். தேர்தல் செலவுக்காக நிறைய பணம் வைக்கப்பட்டுள்ளதாக வந்த தகவலின் பெயரில் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் பணம் ஆவணங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் வருமானவரித்துறையினர் சென்றதாக கூறப்படுகிறது.

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு