பழனி ஜூலை 11
பழனி அருகே உள்ளது பழைய ஆயக்குடி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன் விவசாயி. இவரை தாராபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் வயது 51 என்பவர் தன்னிடம் ரூ ஒரு கோடி மதிப்பிலான இரிடியம் இருப்பதாக கூறி, தற்பொழுது அதை ரூ.19 லட்சத்துக்கு தருவதாக கூறினார். அதை உண்மை என்று நம்பிய பரமேஸ்வரன் ரூ.19 லட்சத்தை கொடுத்து, இரிடியம் இருப்பதாக கூறிய சூட்கேஸை பெற்றுக் கொண்டார். வீட்டில் அவர் சென்று சூட்கேஸை திறந்து பார்க்கும் பொழுது, அதில் வெறும் பெட்டி மட்டும் இருந்தது. இரிடியம் இல்லை. இதனால் மோசடியால் தான் ஏமாந்ததை அறிந்த பரமேஸ்வரன். பழனி டவுன் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி திண்டுக்கல் எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பெயரில், பழனி டிஎஸ்பி செல்வகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி, சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது. பின்பு அவர்கள் தாராபுரத்தில் பதுங்கி இருந்த சக்திவேலை கைது செய்தனர். அவரிடம் இருந்த பத்து லட்சம் பணம் மற்றும் மூனேகால் பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது

More Stories
திருப்பூர் குப்பை பிரச்சனைக்கு தீர்வு காண முதலமைச்சரை சந்திக்க அனைத்து கட்சிகளும் முடிவு..!!
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
26-08-2026