பழனி ஜூலை 11
பழனி அடிவாரம் பூங்கா ரோடு பகுதியில் தண்டபாணி சுவாமி மடத்துக்கு சொந்தமான, சுமார் ஒரு ஏக்கர் 40 சென்ட் நிலம் உள்ளது. ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை பழனி கோவில் நிர்வாகம் மீட்டு கையகப்படுத்தியது. தற்பொழுது இலவச வாகன நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிலத்தை நிர்வாகம் செய்ய பழனி கோவில் இணை ஆணையர் தக்காராக கோர்ட் மூலம் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அந்த நிலத்தை பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில், தனிநபருக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. எனவே அந்த பதிவை ரத்து செய்ய வேண்டும் என்றும், தனியார் பத்திரபதிவு செய்ய விண்ணப்பித்துள்ள விண்ணப்பங்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், பழனி கோவில் நிர்வாகம் பதிவுத்துறைக்கு அறிக்கை அனுப்பியுள்ளது. இந்த தகவலை கோவில் நிர்வாகம் கூறியுள்ளது

More Stories
பழனி அருகே விவசாயிடம் இரிடியம் தருவதாக கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்தவர் கைது..
அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு-புதிய பேருந்து நிலையம் பகுதி கழகம்
10-07-2026