பழனி ஜூலை 28
பழனி நகரமன்ற கூட்டம் நேற்று தொடங்கியது. இதற்கு நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் பொறியாளர் ராஜவேலு, சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், துணைத் தலைவர் கந்தசாமி உள்பட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் துணைத் தலைவர் கந்தசாமி மற்றும் கவுன்சிலர்கள் சுரேஷ், ஜன்னத்துல் பிர்தௌஸ் ஆகியோர், நகர் மன்ற கூட்டத்திற்கு ஆணையர் ஏன் வரவில்லை. அவர் வரவில்லை என்றால் எப்படி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பேசாமல் கூட்டத்தை ஒத்திவைத்து விடுங்கள். என்று கூறினார்கள். இதனால் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி கூறியதாவது: ஆணையர் இல்லாததால் கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக கூறினார் இதனால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது அதன் பின்பு கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்

More Stories
29-07-2026
இராமநாதபுரம்மாவட்டம்
மாநகர காவல்துறை சார்பில்போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்,,