பழனி, ஜூலை 25:
புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பழனியில் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தண்டபாணி சுவாமி மட நிலத்தை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மட நில விற்பனையில் பல மர்மங்கள் இருப்பதாகவும், சிபிசிஐடி அல்ல சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும், நீட் தேர்வை மத்திய சுகாதாரத் துறையே நடத்த வேண்டும், தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் விஜயகுமார் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி