பழனி ஜனவரி 29
பழனி முருகன் கோவில் தைப்பூசம் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வரும் 31ஆம் தேதி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் வெள்ளி ரதம் தேரோட்டமும், வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தைப்பூசம் தேரோட்டம் நடக்க உள்ளது. இதையொட்டி தைப்பூச திருவிழா பாதுகாப்பு பணியிற்காக 3500 போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். குழந்தைகள் பாதுகாப்பிற்காக க்யூ ஆர் கோடு உடன் கூடிய பட்டை வழங்கப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் காணாமல் போனால் சுலபமாக கண்டுபிடிக்கலாம். மேலும் 500 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தைப்பூசம் திருவிழாவையொட்டி தென் மண்டல போலீஸ் ஐஜி விஜயேந்திர பிதாரி வருகை புரிந்தார். மலைக்கோவில் மற்றும் முக்கிய இடங்களில் சென்று ஆய்வு செய்தார். இதில் பழனி கோயில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, திண்டுக்கல் சரக போலீஸ் டி.ஐ.ஜி சாமிநாதன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப், பழனி டிஎஸ்பி தனஞ்செயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன், ஆகியோர் உடன் இருந்தனர்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்