பழனி மே 11
பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் அக்னி நட்சத்திர கழுத்திருவிழா புகழ் பெற்றது. இத்திருவிழா கடந்த 8ஆம் தேதி தொடங்கியது. சித்திரை மாசத்தின் கடைசி ஏழு நாட்களும், வைகாசி மாதத்தின் முதல் ஏழு நாட்களும், மொத்தம் 14 நாட்கள் இத்திருவிழா நடைபெறும். இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் காலை மாலை இரு வேளையிலும், பழனி முருகன் கோவில் மலை அடிவாரம் பகுதியில் கிரிவலம் வருவது தான். குறிப்பாக பெண்கள் தங்களின் தலையில் கடம்ப மர இலையுடன் கூடிய மலர்களை அணிந்து வருவார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிக பக்தர்கள் அதிகாலை 3 மணி முதல் பக்தர்கள் கிரிவலம் சுற்றி வந்த வண்ணம் இருந்தனர். இதற்கான விழா ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து செய்திருந்தார்

More Stories
பழனி திருக்கோவில் வரலாற்றில் ஓராண்டு உண்டியல் வருமானம் முதல் முறையாக 60 கோடியை தாண்டியது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பெரியாழ்வார் ஆனி சுவாதி உற்சவ செப்புத் தேரோட்டம் கோலாகலம்
பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா