பழனி மார்ச் 26
பழனி முருகன் கோவில் பங்குனி உத்திரம் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தமிழ் கடவுள் முருகப்பெருமானின ஆறு படை வீடுகளில் குடி கொண்டுள்ளார். அதில் பழனி மூன்றாம் படை வீடாகும். இங்கு நடைபெறும் திருவிழாக்களில் பங்குனி உத்திரம் திருவிழா சிறப்பானது. இத்திருவிழா இன்று மார்ச் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, ஏப்ரல் 4ம் தேதி வரை. 10 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவின் முக்கிய அம்சமே பக்தர்கள் தீர்த்த காவடி எடுத்து வருவது தான். கொடுமுடி காவிரி ஆற்றில் சிறு சிறு குடங்களில் நீரை சேகரித்து, பின்பு அந்த நீரைதீர்த்த காவடியாக எடுத்து பழனிக்கு வருவார்கள். அந்த தீர்த்த புனித நீரை பழனி முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்வார்கள்.
இன்று பழனி திரு ஆவினன்குடி முருகன் கோவிலில் காலை 9 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சிகள் தொடங்கியது. கோயிலில் கொடி மரத்தின் கீழே புனித கலசங்கள் வைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றம் நிகழ்ச்சிகள் தொடங்கியது. மஞ்சள் நிற கொடியில் சேவளும் மயிலும் வேலும் சந்திரரும் சூரியரும் பொருத்தப்பட்ட மஞ்சள் நிறக் கொடி ஏற்றப்பட்டது. அப்பொழுது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா, வேல் முருகனுக்கு அரோகரா, ஞான தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா என்று பக்தி பெருக்கில் கோஷம் போட்டனர். அதன் பின்பு முருகன் வள்ளி தெய்வானை ஆகியோருக்கு சிறப்பு தீப ஆராதனை காட்டப்பட்டது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேஷ், உதவிஆணையர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் கே எம் சுப்பிரமணியம், அறங்காவலர்கள் தனசேகரன், பாலசுப்பிரமணி, ஜி ஆர் பாலசுப்பிரமணியம், சித்தநாதன் சன்ஸ் எஸ் ஜி பழனிவேல், பழனி கந்தவிலாஸ் அதிபர் என் செல்வகுமார், சரவண பொய்கை கந்த விலாஸ் என் பாஸ்கரன், பழனி டிஎஸ்பி தனஜெயன், இன்ஸ்பெக்டர் மணிமாறன், கண்பத் கிரேண்ட் அதிபர் என் ஹரிஹரமுத்து, முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்என் வேணுகோபால், பில்டிங் காண்ட்ராக்டர் நேரு, பெரியநாயகி கல்வி அறக்கட்டளை சுந்தரம், சாய் கிருஷ்ணா மருத்துவமனை சுப்புராஜ், நகர திமுக செயலாளர் வேலுமணி, வி பி எஸ் கிராண்ட் அதிபர் பெரியசாமி, வள்ளுவர் தியேட்டர் என் செந்தில்குமார், பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் திருமலைசாமி, ஆகியோர் உட்பட ஏராளமான பங்கேறினார்

More Stories
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் கருட கொடியேற்றத்துடன் தொடங்கிய திருக்கல்யாண திருவிழா
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் வெண்ணைத்தாழி திருவிழா: திரளான பக்தர்கள் வழிபாடு
மயிலாப்பூர் ஸ்ரீவேதாந்த தேசிகர் தேவஸ்தானத்தில் ஸ்ரீநிவாஸர் கோயிலில் மகா சம்ப்ரோக் ஷணம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்