பழனி ஏப்ரல் 14
பழனி முருகன் மலை கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சாமி தரிசனம் செய்தனர்
இன்று ஏப்ரல் 14ஆம் தேதி புதிய பராபவ தமிழ் புத்தாண்டையொட்டி பழனி முருகன் மலை கோவில் நடை அதிகாலை 4:00 மணிக்கே திறக்கப்பட்டது. தமிழ் புத்தாண்டையொட்டி முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு அதிகாலை விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. பக்தர்கள் மலைக்கோவிலில் தமிழ் கடவுள் முருகப்பெருமானை கண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். குறிப்பாக மதுரை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர், தர்மபுரி, போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் சாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். மேலும் பழனியில் உள்ள திரு ஆவினன்குடி முருகன் கோவில், பாத விநாயகர் கோவில், பெரிய நாயகி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில், லட்சுமி நாராயண பெருமாள் கோவில், பெரியவுடையார் கோவில், பட்டத்து விநாயகர் கோவில் போன்ற தேவஸ்தான கோவில்களில் தமிழ் புது வருட பிறப்பையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கான தரிசனம் ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மாரிமுத்து, துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் செய்து வந்தனர்
போட்டோ புட் நோட்
பழனியில் தமிழ் புத்தாண்டையொட்டி பழனி மலை கோவில் அடிவாரம் பாத விநாயகர் கோவில் அருகே பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலைக்கு சென்ற காட்சி

More Stories
இன்று 14.04.2026 செவ்வாய்க்கிழமை, திண்டுக்கல்லில் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
’’செல்வச் செழிப்பில் வளர்ந்த ஸ்டாலினுக்கு மக்கள் கஷ்டங்கள் தெரியுமா..?’’
அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…