July 22, 2026

பழனி ரூ.100 கோடி நில மோசடி: சிபிஐ விசாரணை கோரி 26-ல் உண்ணாவிரதம்

பழனி, ஜூலை 22:
பழனி முருகன் கோவில் நிர்வாகத்தின் கீழ் இருந்த தண்டபாணி சுவாமி மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் முறைகேடாக விற்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் ஜூலை 26-ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தெரிவித்தார்.

பழனியில் சர்ச்சைக்குரிய நிலத்தை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கோவில் சொத்துகள் முறைகேடாக கைமாறியுள்ளதாக குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும், கோவில் நிர்வாகத்தில் இருந்து அரசு விலகி தனி வாரியம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும், கோவில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி மாநிலம் முழுவதும் ஜூலை 26-ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Spread the love