September 11, 2026

பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவிப்பு

பர்மிங்காம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

பர்மிங்காமில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 33.5 ஓவர்களில் 133 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சவுத் ஷகீல் 43 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து விளையாடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. எமிலியோ கே 60, பென் டக்கெட் 11, ஜோர்டான் காக்ஸ் 4, ஜோ ரூட் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஹாரி புரூக் 52, டேன் லாரன்ஸ் 5 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. ஹாரி புரூக் 75, டேன் லாரன்ஸ் 65, ஜேமி ஸ்மித் 69, ஆலி ராபின்சன் 50 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தனர். கஸ் அட்கின்சன் 19, ஜோஷ் டங்க் 15 ரன்களில் நடையை கட்டினர்.

முடிவில் இங்கிலாந்து அணி 89 ஓவர்களில் 453 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் ரஸாவுல்லா 4 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 320 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இதில் இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் எடுத்துள்ளது பாகிஸ்தான் அணி. இங்கிலாந்தை காட்டிலும் 268 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது.

Spread the love