முசாபராபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இருந்து, பாக். ராணுவத்தின் எம்ஐ-17 ரக ஹெலிகாப்டர் நேற்று புறப்பட்டது. வானில் மேலெழும்பி பறந்தவுடன், அது தொழில்நுட்ப கோளாறு காரணமாக கீழே விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த 21 பேரும் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.

More Stories
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் ஏமன் படையினர் 59 பேர் உயிரிழப்பு
7 மணி நேரம் விண்வெளியில் நடந்த இந்திய வம்சாவளி வீரர்
இம்ரான் கான் விடுதலை கோரி போராட்டம்: 100+ ஆதரவாளர்கள் கைது