ஜல்லிக்கட்டு போட்டிக்கு சட்டம் இயற்றியது மட்டும்தான் அதிமுக, ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரை வைத்து வாதாடி ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பை 100 சதவீத தீர்ப்பை வாங்கி ஜல்லிக்கட்டு போட்டியை நிலை நிறுத்தியது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் அதற்கு உறுதுணையாக அப்போது இருந்தது சட்டத்துறை அமைச்சராக பணியாற்றியது நான் தான் ஜல்லிக்கட்டு தீர்ப்புக்கு திமுக மட்டுமே உரிமை கொண்டாட முடியும்…
திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி பிரச்சாரம்…
2026 சட்டமன்ற தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகிறார். இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மல்லாங்குடியில் பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு அமைச்சர் ரகுபதி பரப்பரையில் ஈடுபட்டார். அப்போது இந்த ஊருக்கு சாலை வசதி இந்த ஆட்சியில் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது அதேபோல பேருந்து வசதியும் இந்த ஆட்சியில் தான் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டிருக்கிறது அப்படிப்பட்ட திமுக ஆட்சிக்கு மீண்டும் நீங்கள் வாக்களிக்க வேண்டும் மேலும் ஜல்லிக்கட்டு போட்டியில் சட்டம் இயற்றியது மட்டும்தான் அதிமுக ஆனால் உச்ச நீதிமன்றத்தில் மிகப்பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதாடி ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சில் ஐந்து நீதிபதிகளும் ஒரே தீர்ப்பான 100 சதவீத தீர்ப்பை வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வாங்கி ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு உறுதுணையாக இருந்தது தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் அதற்கு அப்போது சட்டத்துறை அமைச்சராக இருந்த நான் உறுதுணையாக செயல்பட்டேன். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றுத் தந்து ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெற காரணமாக இருப்பதற்கு திமுக மட்டுமே உரிமை கொண்டாட முடியும் என கூறினார்.

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .