February 13, 2026

பெங்களூரில் கொடூர விபத்து! வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 7 பேர் பலி

பெங்களூரில் கொடூர விபத்தில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 7 பேர் பலியாகினர்.

சாலை விபத்து

பெங்களூரில் இன்று அதிகாலை வேகமாக வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள தெரிவிக்கின்றன.

டொப்பாஸ்பெட் – ஹோஸ்கோட் நகர வட்டச் சாலையில் இரண்டு சொகுசு கார்கள், டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்று மீது ஒன்று அடுத்தடுத்து மோதியதில் வாகனங்களில் இருந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Spread the love