February 24, 2026

பெரம்பலூர் மாவட்டத்தில் 5,55,131 வாக்காளர்கள் உள்ளனர்-மாவட்ட ஆட்சித்தலைவர் மிருணாளினி தகவல்

பெரம்பலூர், பிப்.24-

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் வெளியிட்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,

பெரம்பலூர் மாவட்டத்தில் 01.01.2026 நாளினை தகுதி நாளாகக் கொண்டு நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தம், 2026 கடந்த 28.10.2025 அன்று துவங்கப்பட்டது.

இப்பணியில் 652 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (BLO), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் நியமனம் செய்யப்பட்ட 2,277 வாக்குச்சாவடி நிலை முகவர்களும் (BLA-2) மற்றும் இல்லம் தேடிக்கல்வி குழுவினர், மகளிர் சுய உதவிக்குழுவினர், ஊராட்சிகளின் கணினி இயக்குபவர்கள் என 783 தன்னார்வலர்களும் 105 சிறப்பு அலுவலர்களும் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் 19.12.2025 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 147 பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,36,304 ஆண் வாக்காளர்களும் 1,44,235 பெண் வாக்காளர்களும், 27 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,80,566 வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

பாலின வாக்காளரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதுபோல் 148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் 3,729 ஆண் வாக்காளர்களும், 4,532 பெண் வாக்காளர்களும் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறப்பு, இரட்டை பதிவு மற்றும் இடப்பெயற்சி காரணமாக 147.பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 1,423 ஆண் வாக்காளர்களும், 1,799 பெண் வாக்காளர்களும், 148. குன்னம் சட்டமன்ற தொகுதியில் 826 ஆண் வாக்காளர்களும், 1,129 பெண் வாக்காளர்களும் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று வெளியிடப்படுகின்ற இறுதி வாக்காளர் பட்டியலின் படி 147-பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதியில் உள்ள 387 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,88,449 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,39,914 ஆண் வாக்காளர்களும், 1,48,507 பெண் வாக்காளர்களும், 28 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

148-குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 345 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,66,682 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,31,720 ஆண் வாக்காளர்களும், 1,34,959 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் இரண்டு சட்டமன்ற தொகுதிகளிலும் 2,71,634 ஆண் வாக்காளர்களும் 2,83,466 பெண் வாக்காளர்களும், 31 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5,55,131 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு பிறகு வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதால் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் வழங்கிடலாம்இவ்வாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சொர்ணராஜ், வாக்காளர் பதிவு அலுவலர்கள் (குன்னம்) சக்திவேல், (பெரம்பலூர்) அனிதா, தனி வட்டாட்சியர் (தேர்தல்)அருளானந்தம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் கலந்துகொண்டனர்.

Spread the love