
அமராவதி: ஆந்திர சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நாளன்று, முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டி உட்பட அவரது கட்சியை சேர்ந்த 11 எம்.எல்.ஏக்கள், அவைக்கு வரும்போதே ஆளும்கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது, அங்கிருந்த காவலாளிகள் மற்றும் போலீஸார் அவர்களை தடுத்தனர்.
இதுகுறித்து நேற்று பேரவை தலைவர் அய்யண்ணபாத்ருடு அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர், பேரவைக்கு கண்டிப்பாக வர வேண்டும்.
சில எம்.எல்.ஏக்கள் பேரவைக்கு வருவதே இல்லை. சரியாக பேரவைக்கு வராத எம்.எல்.ஏக்களை திரும்ப பெறும் திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.

More Stories
பிரிவினையின் போது உ.பி.யில் குடியேறிய 12,000+ குடும்பங்களுக்கு நிலம் – யோகி அரசு ஒப்புதல்
சைக்கிளில் 14 நாட்களில் எவரெஸ்ட் அடிவாரம் சென்ற முதல் இந்திய பெண்
விமானத்தில் வந்து தேர்தலில் வாக்களிக்க ரூ.2 லட்சம் வரை செலவு செய்யும் மலையாளிகள்