November 19, 2026

பொட்டம்பட்டி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அறிவுசார் மையத்தை திறக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்மு.கார்த்திக் (எ) வேம்பன் கோரிக்கை.

ஒட்டன்சத்திரம் நவ.19

கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டம்பட்டி கிராமத்தில் கட்டி முடிக்கப்பட்ட அறிவுசார் மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என தமிழ்ப்புலிகள் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் மு.கார்த்திக் (எ)வேம்பன் கோரிக்கை மனு அளித்துள்ளார். அம்மனுவில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி கணக்கன்பட்டி ஊராட்சி பொட்டம்பட்டி கிராமத்தில் அறிவுசார் மையத்தை அமைக்க கடந்த ஆண்டு தமிழ்ப் புலிகள் கட்சியின் கோரிக்கையை ஏற்று கட்டி முடிக்கப்பட்டது. அறிவுசார் மையம் தமிழக அரசின் அயோத்தி தாசர் திட்டத்தின் கீழ் கட்டி முடித்து மூன்று மாதங்கள் ஆகியும் இதுவரை திறக்கப்படவில்லை எனவே  இப்பகுதியில் உள்ள மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் போர்க்கால அடிப்படையில் உடனே அறிவுசார் மையத்தை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love