June 10, 2026

‘போரை நிறுத்தம் செய்ய இஸ்ரேல் – ஈரான் விருப்பம்..’ ஆனால் டிரம்ப் சொன்னது என்ன?

ஈரான் மீது, பிப்ரவரியில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தின. இதனால், உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து நடக்கும் கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், உலகம் முழுதும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு மாதம் தாக்குதல் தொடர்ந்த நிலையில், கடந்த ஏப்ரலில் அமெரிக்கா – ஈரான் இடையே தற்காலிக போர்நிறுத்தம் ஏற்பட்டது.

இஸ்ரேல் – ஈரான்முகநூல்

முதல் கட்ட பேச்சு தோல்வி அடைந்த நிலையில், இரண்டாம் கட்ட பேச்சுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. தற்காலிக போர்நிறுத்தத்துக்கு பின், முதன்முறையாக, இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. இஸ்ரேலின் வடக்கு நகரங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. ஹைபா உள்ளிட்ட நகரங்களில் நடந்த தாக்குதலில், பல்வேறு கட்டடங்கள் சேதமடைந்தன. உயிர் சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

Spread the love