September 22, 2026

மதுரைமாவட்டம்

மதுரையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு 200 ஏக்கரில் பழமை மாற புதிய துணை நகர அமைக்க வேண்டும் மதுரையில் நடைபெற்ற மாவட்ட நுகர்வோர் விநியோகஸ்தர்களின் சங்க பவள விழாவில் தீர்மானம் நிறைவேற்றம். மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்களின் 35 ஆம் ஆண்டு மாநாடு மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள உள் அரங்கில் நடைபெற்றது. மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க தலைவர் மாதவன் தலைமையில் நடைப்பெற்ற இவ்விழாவில் தமிழக எரிசக்தி சட்டம் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் விஜய் அன்பன் கல்லானை, கார்த்திகேயன், முஸ்தபா, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரிகள் சங்க தலைவர் எஸ்விஎஸ். எஸ் வேல் சங்கர், கௌரவ ஆலோசகர் எஸ் பி ஜெயப்பிரகாசம், மதுரை மாவட்ட நுகர் பொருள் விநியோகஸ்தர் சங்க செயலாளர் வினோத் கண்ணா, பொருளாளர் வெங்கட் சுப்பிரமணியன் மற்றும் சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் ஆண்டு பவள விழா மலரை அமைச்சர் நிர்மல் குமார் வெளியிட சங்க நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர் 35 ஆம் ஆண்டு பவள விழா பொதுக்குழு கூட்டத்தில் 5 தீர்மானங்கள் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதுரை வளர்ந்து வரும் நகரங்களில் முக்கிய நகரமாக விளங்குவதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது எனவே மதுரைக்கு அருகாமையில் மதுரை துணை நகரம் அமைக்க வேண்டும் அதில் பழமை மாற வடிவத்துடன் 200 ஏக்கர் பரப்பளவில் துணை நகரம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும். மதுரை மாநகரின் வர்த்தக மற்றும் தொழில் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தி, தென் தமிழகத்தின் முக்கிய வர்த்தக மையமாக மதுரையை உருவாக்கும் நோக்கில், தற்போது அரசரடியில் இயங்கி வரும் ஜெயில் நிலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய “Madurai Trade Center” அமைத்து தர வேண்டும் மதுரை மாநகரின் வேகமான வளர்ச்சி மற்றும் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பான, விரைவான மற்றும் வசதியான பயணத்திற்கு மதுரை மெட்ரோ ரயில் திட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். எனவே, இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை மதுரை மாவட்ட நுகர்பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சார்பாக தீர்மானமாக நிறைவேற்றினர். இந்த மாநாடு நடைபெறும் உள் அரங்கில் மதுரை மாவட்ட சிறு வணிக உற்பத்தி நிறுவனங்கள் சார்பாக வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சியும் நடைபெற்றது.

Spread the love