June 14, 2026

மதுரை பின்னணியில் ஜீவா நடிக்கும் படம்! | Jiiva | Lark Studios

ஜீவாவின் இப்படத்தை ரா.வெங்கட் இயக்குகிறார். 2023ல் வெளியான `கிடா’ படம் மூலம் இயக்குநரானவர் இவர்.

தமிழ் சினிமாவின் முக்கியமான  நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் கடைசியாக நடித்து வெளியான `தலைவர் தம்பி தலைமையில்’ படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. சமீபத்தில் இவரின் தந்தையும், தயாரிப்பாளருமான ஆர் பி சௌத்ரி விபத்தில் காலமானார். மெல்ல மெல்ல அந்த இழப்பில் இருந்து மீண்டு வந்து இப்போது அடுத்த படத்தை அறிவித்துள்ளார் ஜீவா.

ஜீவாவின் இப்படத்தை ரா.வெங்கட் இயக்குகிறார். 2023ல் வெளியான `கிடா’ படம் மூலம் இயக்குநரானவர் இவர். மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்த திரைப்படம், அப்பா – மகன் உறவின் உணர்வுகளையும், அவர்களுக்கிடையேயான பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு உருவாகிறது.

எம். சுகுமார் ஒளிப்பதிவு, கணேஷ் சிவா படத்தொகுப்பு என தொழில்நுட்பக்குழு இணைந்துள்ளது. ‘கருடன்’, ‘மாமன்’ போன்ற தரமான வெற்றிப்படங்களை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இப்படத்தை தயாரிக்கிறது. அடுத்த மாதம் மதுரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது.

Spread the love