February 22, 2026

மழையால் ரத்தான சூப்பர் 8 போட்டி! மீண்டும் இந்தியா vs பாக் மோதல்?

நியூசிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதால் அந்த குரூப்பில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   

ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. குரூப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்து, தற்போது சூப்பர் 8 சுற்றுகள் தொடங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் முதல் நாளான நேற்று பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாட இருந்தன. டாஸ் போடப்பட்டு ஆட்டம் தொடங்க இருந்த நிலையில், மழையின் காரணமாக ஒரு பால் கூட போடாமல் இந்த போட்டி கைவிடப்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து vs பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி ரத்து செய்யப்பட்டதால் அந்த குரூப்பில் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Spread the love