August 14, 2026

மார்க்சிஸ்ட் கட்சிக்கு வீட்டை தானமாக வழங்கிய தம்பதி

சென்னை: திரு​வல்​லிக்​கேணி​யைச் சேர்ந்த தம்​ப​தி​யர், தங்​கள் வீட்டை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சிக்கு தான​மாக வழங்​கி​யுள்​ளனர்.

திரு​வல்​லிக்​கேணி ஐஸ் ஹவுஸ் டாக்​டர் நடேசன் சாலை பகு​தி​யைச் சேர்ந்த தம்​ப​தி​யர் வழக்​கறிஞர் இ.கோகுல​கிருஷ்ணன் – ஜி.ஜெயந்​தி. இவர்​கள் அப்​பகு​தி​யில் உள்ள தங்​களுக்​குச் சொந்​த​மான வீட்டை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மத்​திய சென்னை மாவட்​டத்​துக்கு தான​மாக வழங்க விருப்​பம் தெரி​வித்​திருந்​தனர்.

இந்த நிலை​யில், பிடல் காஸ்ட்​ரோ​வின் நூற்​றாண்டு பிறந்​த​நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, தங்​களது வீட்டை முறைப்படி

பத்​திரப் பதிவு செய்து, சொத்து தொடர்​பான ஆவணங்​களை மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகத்​திடம் வழக்​கறிஞர் கோகுல​கிருஷ்ணன் நேற்று ஒப்​படைத்​தார்.

குடும்​பச் சொத்தை கட்​சிப் பணிக்​காக வழங்​கிய தம்​ப​தி​யருக்கு பெ.சண்​முகம் நன்​றி​யும், பாராட்​டும் தெரி​வித்​தார். மத்​திய சென்னை மாவட்​டச் செய​லா​ளர் ஜி.செல்வா சால்வை அணி​வித்து கவுர​வித்​தார்.

மாவட்ட செயற்​குழு உறுப்​பினர்​கள் திரு​வேட்​டை, மாவட்​டக் குழு உறுப்​பினர் சுந்​தரம்உள்​ளிட்​டோர்​ உடன்​ இருந்​தனர்​.

Spread the love