புதுடெல்லி:: பூடானின் எரிசக்தி துறை அமைச்சர் லியோன்போ ஜெம் ஷெரிங் இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று டெல்லியில் மத்திய மின்சாரத் துறை அமைச்சர் மனோகர்லால் கட்டாரை சந்தித்துப் பேசினார்.
இது குறித்து மத்திய மின்சாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”பூடானின் புனாட்சங்சு-2 நீர்மின் திட்டத்தின் (1020 மெகாவாட்) மின் உற்பத்தியை வணிக ரீதியாக மேம்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனர். இந்தியா – பூடான் இடையே மின்சார பரிமாற்ற உள்கட்டமைப்புக்கான திட்டமிடல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

More Stories
பிரதமர் மோடி இன்று மலேசியா பயணம்!
“வளர்ந்த இந்தியா இலக்கை அடைய அறிவியல்-தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்த வேண்டும்” – ஐஐடி இயக்குநர் காமகோடி வலியுறுத்தல்
மத்திய கைலாஷ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘எல்’ வடிவ பாலம் பிப்.16-ல் திறப்பு