October 27, 2026

முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு.

சென்னை: முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு. தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் நாளை மறுநாள் அக்டோபர் 29-ம் தேதி காலை 10:30 மணிக்கு நடக்கிறது.

கடந்த அக்டோபர் 15-ம் தேதி முதல்வர் விஜய் தலைமைச் செயலகத்தில் *தமிழ்நாடு குறைக்கடத்தி சூழலமைப்பு திட்டத்தை (Semiconductor Ecosystem)* தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மதுரமங்கலத்தில் “குறைக்கடத்தி மற்றும் மின்னணுவியல் பூங்கா” அமைக்க விதி 110-ன் கீழ் அறிவித்தார். இதற்கான முதலீடுகள், ஊக்கத்தொகை திட்டங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்க உள்ளதாக தகவல்.

தவெக அரசு பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கரில் ரூ.1,200 கோடியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட அரசாணை வெளியிட்டது. ஆனால் அப்பகுதி மீனவர்கள், குடியிருப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அக்டோபர் 29-ம் தேதியே ஆர்ப்பாட்டம் நடத்த அறிவித்துள்ளனர். அதே நாளில் அமைச்சரவை கூடுவதால், பட்டினப்பாக்கம் திட்டத்தை கைவிட்டு சென்னை பல்லவன் இல்லத்தில் (13.22 ஏக்கர்) புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் குறித்து முடிவு எடுக்கப்படலாம் என அதிகாரிகள் தகவல்

ஏற்கனவே தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா அறையிலேயே மின்வெட்டு ஏற்பட்டது. மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டு புகார், 4,500 மெகாவாட் கூடுதல் மின்சாரம் கொள்முதல் டெண்டர், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு, மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம் குறித்து ஆலோசிக்கப்படும். இந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love