August 26, 2026

முதல் முறையாக 100% உள்நாட்டில் தயாரான ஏகே-203 ‘ஷெர்’ துப்பாக்கி சோதனை வெற்றி

அமேதி: முற்​றி​லும் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​பட்ட ஏகே-203 ஷெர் துப்பாக்கி வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டுள்​ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்​டத்​தின் கீழ் ஏகே-203 தாக்​குதல் துப்​பாக்​கி​களை உள்நாட்​டிலேயே தயாரிப்​ப​தற்​காக, உத்தர பிரதேச மாநிலம் அமே​தி​யில் இந்தோ-ரஷ்யன் ரைபிள்ஸ் நிறு​வனம் (ஐஆர்ஆர்பிஎல்) 2019-ல் நிறு​வப்​பட்​டது.

இந்தி​ய-ரஷ்ய கூட்டு நிறு​வன ஆலையில் தயாரிக்​கப்​பட்​டுள்ள இந்​தத் துப்​பாக்​கிக்கு ‘ஷெர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐஆர்​ஆர்​பிஎல் தலை​மைச் செயல் அதி​காரி​ மேஜர் ஜெனரல் எஸ்​.கே. சர்மா சமீபத்​தில் வெளி​யிட்ட பதி​வில் கூறியிருப்​ப​தாவது: எங்​கள் நிறு​வனத்​தில் உள்ள அனை​வருக்​கும் இது பெரு​மைமிக்க தருணம்.

100% இந்​திய உதிரி பாகங்​கள் மற்​றும் உள்​ளீட்​டுப் பொருட்களுடன் தயாரிக்​கப்​பட்ட முதல் ஏகே-203 (ஷெர்) துப்பாக்கியை வெற்றிகர​மாகத் தயாரித்து சுட்​டுப் பார்த்துள்ளோம். அடுத்​தகட்​ட​மாக, செப்​டம்​பர் 2026-ல் ராணுவத்தின் பரிசோதனை​களுக்​காக ஒப்​படைக்க, தேவை​யான எண்​ணிக்​கையி​லான துப்​பாக்​கி​களை உரு​வாக்​கும் பணி​யில் ஈடுபட்டு வரு​கிறோம். இவ்​வாறு அதில் கூறி​யுள்​ளார்.

ஏகே-203 என்​பது 7.62×39மிமீ, கலஷ்நிகோவ் தளத்தை அடிப்படையாகக் கொண்ட எரி​வாயு மூலம் இயங்​கும் தாக்​குதல் துப்​பாக்​கி​யாகும். இது நிமிடத்​துக்கு 700 சுற்​றுகள் சுடும் திறனையும், 800 மீட்​டர் வரம்​பை​யும் கொண்​டுள்​ளது.

Spread the love