சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் வரும் ஜூன் 17ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திமுக சட்டப்பேரவைக் கட்சியின் கொறடா எ.வ.வேலு வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் 17-06-2026 புதன்கிழமை மாலை 6.00 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், “கலைஞர் அரங்கில்” நடைபெறும். அதுபோது கழக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் எவ்வாறு செயல்படுவது, கடந்த ஒரு மாத கால தவெக ஆட்சி குறித்து எவ்வாறு விமர்சனங்களை முன்வைப்பது என்பது திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தும் விதமாக இந்தக் கூட்டம் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

More Stories
கலைஞரின் 8ம் ஆண்டு நினைவுதினம் முன்னிட்டு 500 தூய்மை பணியாளர்கள் மக்களுக்கு காலை உணவு: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழங்கினார்
குறுவை நிவாரணமா, சிறப்புத் தொகுப்பா? – முதல்வர், அமைச்சர் பதிலில் முரண்பாடு என முத்தரசன் சாடல்
நெடுந்தீவில் தஞ்சமடைந்த 11 தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு