மேட்டூர்: சமீபத்தில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து கடந்த சில தினங்களாக அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டமும் குறைய வாய்ப்புள்ளதால், குறுவை சாகுபடி செய்ய தங்களுக்கு தேவையான தண்ணீர் முழுமையாக கிடைக்குமா என டெல்டா விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை 8 மணி நிலவரப்படி 8,041 கனஅடியிலிருந்து, 7,790 கன அடியாக குறைந்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 92.16 அடியாக உயர்ந்த நிலையில், தற்போது டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து 7,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனிடையே அணையிலிருந்து 45 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் முழு சாகுபடிக்குப் போதுமானதாக இருக்காது என விவசாயிகள் ஏற்கனவே கவலை அடைந்து உள்ளனர். இந்த சூழலில் அடுத்தடுத்த நாட்களில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளதால் விவசாயிகள் மத்தியில் கவலை அதிகரித்து உள்ளது.

More Stories
மாசி மகாமக விழா ஏற்பாடுகள்: செப்.10 கும்பகோணத்தில் அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு
“பள்ளிக்கரணை சதுப்புநில எல்லைகளை உடனடியாக வரையறுக்க வேண்டும்” – அன்புமணி கோரிக்கை
முதலமைச்சர் விஜய்யின் புதிய அலுவலக பணிகள்: ரூ.3.78 கோடிக்கு டெண்டரை வென்றது ராசி பில்டர்ஸ்