கட்சி நிர்வாகிகளுடன் ராமதாஸ் முக்கிய ஆலோசனை மேற்கொள்வது பற்றி …

தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்– கோப்புப் படம்
கூட்டணி குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளதையொட்டி கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலான கட்சிகள் கூட்டணியை முடிவு செய்துள்ள நிலையில் பாமகவின் ராமதாஸ் இன்னும் முடிவை அறிவிக்கவில்லை.
அதிமுக- பாஜக கூட்டணியில் அவரது மகன் அன்புமணி இணைந்துள்ளதால், திமுக அல்லது தவெகவுடன் ராமதாஸ் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்கும் என்று ராமதாஸ் ஒருமுறை கூறியிருந்தார்.Advertise with us
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக தைலாபுரத்தில் ராமதாஸ் இன்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கூட்டணி குறித்து அவர் இன்று அறிவிப்பு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே? நான்குநேரி கொலைச் சம்பவத்துக்கு விஜய் கண்டனம்!
ஈரோட்டில் செங்கோட்டையன் தான் வேட்பாளர்? தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் சிக்னல் – விஜய் முடிவு என்ன?
விஜய் பேச ஆரம்பித்தால் இலங்கையில் கூட பூகம்பம் ஏற்படும் – நாஞ்சில் சம்பத் பரபரப்பு பேச்சு!